​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
9 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம்

Published : Jan 11, 2019 7:09 AM

9 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம்

Jan 11, 2019 7:09 AM

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில், 9 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் திருவேள்விக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், குத்தாலம், மேல்செட்டி தெருவில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில், செல்வராஜ் என்பவர், கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், இதில் சேர்ந்து, ஆயுர்வேதம், மற்றும் சித்த மருத்துவத்துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர்.

இதற்குரிய வகுப்புகளை நடத்தாமலும், செய்முறை பயிற்சி அளிக்காமலும், செல்வராஜ் அளித்த சான்றிதழ்களை பெற்ற 900க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள், நாடு முழுவதும், மாற்றுமுறை மருத்துவர் என்ற பெயரில், வைத்தியம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக, தினசரி பத்திரிக்கை ஒன்றில், செல்வராஜ் விளம்பரம் கொடுத்துள்ளார். இதைக்கண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐயமுற்றனர்.

இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநரகத்தின் துணை கண்காணிப்பாளர் தாமஸ்பிரபாகர் தலைமையிலான அதிகாரிகளும், நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும், பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களும்,

அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைகழகம் என்ற பெயரில் ஒரு வீட்டில் வைத்து நடத்தப்பட்டு வந்த அந்த கல்வி நிறுவனம், போலியானது என்பதை கண்டறிந்த அவர்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உதவியுடன் அந்த போலி பல்கலைக்கழகத்தை மூடி சீல் வைத்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகார் தொடர்பாக, குத்தாலம் காவல்நிலைய போலீசார், தப்பியோடி தலைமறைவான திருவேள்விக்குடி செல்வராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். 

பணத்திற்கு ஆசைப்பட்டு, போலி மருத்துவர்களை உருவாக்கி, அப்பாவி பொதுமக்களின் உயிரோடு விளையாட முனையும் அனைத்து மோசடி பேர்வழிகளையும், தயவு தாட்சண்யமின்றி, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்...