​​ தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரெய்லர் தமிழில் நேற்று வெளியீடு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரெய்லர் தமிழில் நேற்று வெளியீடு

Published : Jan 11, 2019 7:09 AM



தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரெய்லர் தமிழில் நேற்று வெளியீடு

Jan 11, 2019 7:09 AM

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரெய்லர் தமிழில் நேற்று வெளியானது. விஜய் ரத்னாகர் இயக்கியுள்ள இந்த படத்தில் மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடித்துள்ளார்.

கடந்த 2004 முதல் 2008 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் ஊடகத்துறை ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு எழுதிய தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் புத்தகத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதற்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிம்ன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.