​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் இருவர் மாயம்

Published : Jan 10, 2019 5:07 PM

கும்பகோணம் அருகே பள்ளி மாணவர்கள் இருவர் மாயம்

Jan 10, 2019 5:07 PM

கும்பகோணம் அருகே மாயமான பள்ளி மாணவர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொட்டையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு நேற்று சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான வினித் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று வரை வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மாணவர்கள் இருவரையும் பெற்றோரை அழைத்து வர தலைமை ஆசிரியர் சொன்னதாகக் கூறப்படுகிறது.