​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 2,3 தேதிகளில் டெல்லி பயணம் - பல்வேறு கட்சியினருடன் சந்திப்பு

Published : Mar 29, 2018 12:26 PM



சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 2,3 தேதிகளில் டெல்லி பயணம் - பல்வேறு கட்சியினருடன் சந்திப்பு

Mar 29, 2018 12:26 PM

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரும் ஏப்ரல் 2 மற்றும் 3 தேதிகளில் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து டெல்லியில் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுவதால் அதற்கான அரசியல் வியூகம் அமைப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ஆந்திராவுக்கு நீதி கேட்கவே தாம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக சட்டப்பேரவையில் சந்திரபாபு தெரிவித்தார்.