​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சவூதி இளம்பெண்ணுக்கு ஐநா அகதிகள் முகமை பாதுகாப்பும், பாஸ்போர்டும் வழங்கியதாக தகவல்

Published : Jan 09, 2019 12:13 PM

சவூதி இளம்பெண்ணுக்கு ஐநா அகதிகள் முகமை பாதுகாப்பும், பாஸ்போர்டும் வழங்கியதாக தகவல்

Jan 09, 2019 12:13 PM

சவூதியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறி தாய்லாந்திற்கு வந்த இளம்பெண், தமக்கு ஐநா அகதிகள் முகமை பாதுகாப்பு அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு குடும்பத்தினரால் வார்த்தைகளாலும், தாக்குதல் நடத்தியும் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும், பெற்றோர் தமது படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை எனவும் கூறி 18 வயதான ரஹாஃப் என்ற சவூதி பெண் தாய்லாந்து வந்தார்.

ஆஸ்திரேலியா சென்று தஞ்சமடைய இருந்த அவர், ஆண் துணையில்லாமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர்  மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தாய்லாந்து குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சவூதி சென்றால் கொலை செய்யப்படலாம் என கூறிய அவர் விமான நிலைய விடுதியில் தங்கியுள்ளார். அங்கு இருந்து வெளியேற மறுத்ததோடு, அறைகலன்களை வைத்து கதவை அடைத்து கொண்டார். அவர் கோரியபடியே ஐ.நா. அகதிகள் முகமை பாதுகாப்பும், பாஸ்போர்டும் கிடைத்துவிட்டதாக தற்போது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.