​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிவிட்டர் வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக ரீடிவீட்

Published : Jan 07, 2019 6:41 PM

டிவிட்டர் வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக ரீடிவீட்

Jan 07, 2019 6:41 PM

ஜப்பானில் பெரும் பணக்காரர் ஒருவரின் டிவீட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 49 லட்சம் பேரால் ரீடிவீட் செய்யப்பட்டுள்ளது.

3 ஆயிரம் கோடி யென் சொத்து மதிப்பு கொண்ட யுசாகு மேஸாவா (Yusaku Maezawa), என்பவர் தமது ஸேஸோடவுன் வெப்சைட் மூலம் கிறிஸ்துமஸ் புத்தாண்டை ஒட்டி ஆயிரம் கோடி யென்னுக்கு விற்பனை நடைபெற்றதாக பகிர்ந்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள தமது டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட பதிவை ரீடிவீட் செய்யும் 100 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 10 கோடி யென்கள் பிரித்தளிக்கப்படும் என அறிவித்தார்.

கடந்த 5-ம் தேதி அறிவித்த நிலையில் 2 நாட்களில் 49 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரது பதிவை ரீடிவீட் செய்துள்ளனர். இது டிவிட்டர் வரலாற்றிலேயே அதிகபட்சமாகும்.

இந்திய மதிப்புப் படி தேர்வாகும் ஒவ்வொருவருக்கும் தலா 6 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணமாக வழங்கப்படும்.