​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தலை அறிவித்து நிறுத்தியது ஆணையத்தின் நம்பிக்கையைக் குறைத்து விடும்-ஈஸ்வரன்

Published : Jan 07, 2019 3:58 PM

தேர்தலை அறிவித்து நிறுத்தியது ஆணையத்தின் நம்பிக்கையைக் குறைத்து விடும்-ஈஸ்வரன்

Jan 07, 2019 3:58 PM

திருவாரூர் இடைத்தேர்தலை முதலில் அறிவித்துவிட்டுப் பின்னர் நிறுத்தியிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும் எனக் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கருத்துக் கேட்டு நிறுத்துவதற்குப் பதில், தேர்தலை அறிவிக்காமல் இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புயல் பாதித்த பகுதியில் உள்ள ஒரு தொகுதிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது எல்லோருக்கும் வியப்பளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். வருங்காலத்தில் தேர்தல் ஆணையம் எந்தத் தேர்தலை அறிவித்தாலும் அது நடக்குமா என்ற சந்தேகம் எழும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜனநாயக முறையில் நடக்க வேண்டிய தேர்தல் இப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.