​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் -மு.க.ஸ்டாலின்

Published : Jan 07, 2019 3:51 PM

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் -மு.க.ஸ்டாலின்

Jan 07, 2019 3:51 PM

பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், பட்டாசுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

பின்னர் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கூடியது போல, பட்டாசு தொழில் பிரச்சனைக்கும் உடனடியாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.