​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3.5 சதவீதம் சரிவைச் சந்தித்த ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகள்

Published : Mar 29, 2018 12:22 AM

3.5 சதவீதம் சரிவைச் சந்தித்த ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகள்

Mar 29, 2018 12:22 AM

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 772 கோடி ரூபாய் கடன் மோசடிப் புகார்களை அடுத்து அந்த வங்கியின் பங்கு விலை சரிந்தது.

2009 முதல் 2012-ம் ஆண்டு வரை மீன் பண்ணைகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு கடன் கொடுக்கப்பட்டதில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி நடைபெற்றிருப்பதும், இதற்கு வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 5 கிளைகளில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பான 5 புகார்களை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மோசடிப் புகார்கள் காரணமாக ஐ.டி.பி.ஐ. வங்கிப் பங்குகள் 3 புள்ளி 5 சதவீதம் சரிவைச் சந்தித்தன.