​​ அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ரஷ்யர்களின் தலையீடு இருக்க வாய்ப்பு- CIA
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ரஷ்யர்களின் தலையீடு இருக்க வாய்ப்பு- CIA

Published : Jan 30, 2018 4:55 PM

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ரஷ்யர்களின் தலையீடு இருக்க வாய்ப்பு- CIA

Jan 30, 2018 4:55 PM

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ரஷ்யர்களின் தலையீடு இருக்க வாய்ப்புள்ளதாக சி.ஐ.ஏ. தலைவர் மைக் பாம்பியோ ((Mike Pompeo)) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு, முறைகேடுகள் செய்ததாகவும், இதனாலேயே டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை ரஷ்யாவும், அமெரிக்க அதிபர் டிரம்பும் மறுத்த நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தலில், ரஷ்யர்களின் தலையீடு இருக்கும் என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பி.பி.சி. தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சி.ஐ.ஏ. தலைவர் மைக் பாம்பியோ, அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தேர்தலை முடிந்தவரை நேர்மையாக நடத்த அமெரிக்கா உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.