​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலம் தமிழகம் - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Jan 06, 2019 2:14 PM



தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலம் தமிழகம் - அமைச்சர் செங்கோட்டையன்

Jan 06, 2019 2:14 PM

தொழில் தொடங்குவதற்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தங்கு தடையற்ற மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை போன்ற வசதிகள் தமிழகத்தில் உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் வருகை புரிவதாக தெரிவித்தார்.