​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமராக இருந்தவர் - சிவசேனா

Published : Jan 05, 2019 12:58 PM

மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமராக இருந்தவர் - சிவசேனா

Jan 05, 2019 12:58 PM

மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமராக செயல்பட்டவர் என்று சிவசேனா கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. மன்மோகன் சிங் எதேச்சையாக பிரதமராக பதவி ஏற்க நேர்ந்ததாக குறிப்பிட்டு த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இது குறித்து சிவசேனாவின் எம்.பி., சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். தங்களை பொறுத்தவரை மன்மோகன் சிங்கை எதேச்சையாக பிரதமரானவராக கருதவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நரசிம்ம ராவுக்கு பிறகு வெற்றிகரமான பிரதமர் என்றால் அது மன்மோகன் சிங் தான் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் மீது நாட்டு மக்கள் நன் மதிப்பு வைத்திருப்பதாகவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.