​​ மின்னணு உடற்பயிற்சி கண்காணிப்பு கருவிகளுக்கு கட்டுப்பாடு குறித்து அமெ., பெண்டகன் ஆய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்னணு உடற்பயிற்சி கண்காணிப்பு கருவிகளுக்கு கட்டுப்பாடு குறித்து அமெ., பெண்டகன் ஆய்வு

Published : Jan 30, 2018 4:43 PM

மின்னணு உடற்பயிற்சி கண்காணிப்பு கருவிகளுக்கு கட்டுப்பாடு குறித்து அமெ., பெண்டகன் ஆய்வு

Jan 30, 2018 4:43 PM

அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது மின்னணு கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்துவதை ஒழுங்குமுறைப் படுத்துவது குறித்து பெண்டகன் ஆய்வு செய்து வருகிறது.

Strava என்ற மொபைல் செயலியை பயன்படுத்தி கடின உடற்பயிற்சி செய்வோரின் தரவுகளை சேகரித்து, வைத்து தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலான ராணுவ படையணிகள் மற்றும் உளவுக்குழுக்களின் முகாம்கள் மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான வழித்தடங்கள் ஒளிரும் வண்ணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இணையத்தில் வெளியான இந்த தரவுகளை 20 வயதான ஆஸ்திரேலிய இளைஞர் கண்டறிந்து எச்சரிக்கும் வரை, ராணுவ அமைப்புகள் இதனை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் உலகெங்கிலும் அமெரிக்க ராணுவத்தின் முகாம்கள் மற்றும் வீரர்களின் பயிற்சி முறைகள் அப்பட்டமாக இணையத்தில் வெளியானதால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் கவலையடைந்துள்ளது. எனவே வீரர்கள் மின்னணு கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.