​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Published : Jan 04, 2019 1:33 PM

ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Jan 04, 2019 1:33 PM

மஹாராஷ்ராவில் ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். தானே மாவட்டத்தில் உள்ள பட்லபூரில் இன்று காலை ரசாயனத் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருந்தபோதும் தீ கொளுந்து விட்டு எரிவதால், அதிக உயரத்துக்கு ரசாயன நெடியுடன் புகை வெளியேறி வருகிறது.

ரசாயனம் என்பதால் தீயின் வீரியம் குறையாமல் தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீவிபத்தை வேடிக்கை பார்க்கத் திரண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆலையில் யாரேனும் சிக்கியுள்ளனரா? எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.