​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அப்பலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

Published : Jan 04, 2019 10:10 AM

அப்பலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

Jan 04, 2019 10:10 AM

திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று அதிகாலை, அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இன்று அதிகாலை 5 மணியளவில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு துரைமுருகன் வந்தார்.

அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பிறகு காலை 7.30 மணியளவில் வீடு திரும்பினார்.

லேசாக நெஞ்சுவலிப்பது போல துரைமுருகன் உணர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவையில் நேற்று கலைஞர் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய துரைமுருகன், கலைஞருடனான தமது பிணைப்பை விவரித்து கண்ணீர்விட்டு கதறி அழுததது குறிப்பிடத்தக்கது.