​​ எகிப்து பாலைவனப் பகுதிகளில் புதிய வகை டைனோசர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எகிப்து பாலைவனப் பகுதிகளில் புதிய வகை டைனோசர்கள்

எகிப்து பாலைவனப் பகுதிகளில் புதிய வகை டைனோசர்கள்

Jan 30, 2018 4:40 PM

எகிப்து பாலைவனப் பகுதிகளில் ஒரு பேருந்தின் அளவிலான புதிய டைனோசர் ஒன்றின் படிமங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சஹாரா உள்ளிட்ட பாலைவனப் பகுதிகளில் கிடைத்த படிமங்களின் படி 8 கோடி ஆண்டுகளுக்கு முன் மன்சோராசரஸ் ((Mansourasaurus)) என்ற தாவர உண்ணி வகை டைனோசர்கள் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீளமான கழுத்தும் 4 கால்களும் கொண்ட இந்த வகை டைனோசர்கள் 33 அடி நீளமும் ஐந்தரை டன் எடையும் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலப் பகுதிகளில் வாழும் தன்மையுள்ள இந்த வகை டைனோசர்கள் மத்தியத் தரைக் கடல் பகுதியில் காணப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.