​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்டெய்னர் ஓட்டுனர்களிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வசூல் என புகார்

Published : Dec 30, 2018 7:08 PM

கண்டெய்னர் ஓட்டுனர்களிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வசூல் என புகார்

Dec 30, 2018 7:08 PM

சென்னை திருவொற்றியூரில் சிசிடிவி கேமரா பொருத்தபட்டதால், கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களிடம் போக்குவரத்து போலீசார் ஆள்வைத்து லஞ்சம் வாங்குவதாக வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை துறைமுகத்துக்கு வந்து செல்லும் லாரிகள், காத்திருப்பு நேரத்தை குறைக்க 100 முதல் 200 ரூபாய் வீதம் லஞ்சம் கொடுத்து முன்னேறிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

அதிவேகத்தில் லாரிகள் சென்று அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டதால், அந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனால் ஆட்களை வேலைக்கு வைத்து தங்களுக்கு மாற்றாக போக்குவரத்து போலீசார் லஞ்சம் வசூலிப்பதாகவும் கூறி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.