​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பனிப்பொழிவால் விளைச்சல் குறைவு, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனை

Published : Dec 30, 2018 2:31 PM

பனிப்பொழிவால் விளைச்சல் குறைவு, ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கு விற்பனை

Dec 30, 2018 2:31 PM

பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் குறைந்ததால் கன்னியாகுமரியில் மல்லிகைப் பூ விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி கேரளாவிற்கும் கொண்டு செல்லப்படும் பூக்களின் மொத்த விற்பனை சந்தை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ளது. இங்கு மல்லிகை, பிச்சி,சம்பங்கி, வாடாமல்லி, அரளி என விதவிதமான பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது, இந்த சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ இரண்டாயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ஐநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், உற்பத்திக் குறைவால் தற்போது விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். பிச்சிப்பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை காலம் என்பதால், பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.