​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேரிடர் காலத்தில் சேவை செய்தோருக்கு சிறப்பு விருது

Published : Dec 27, 2018 8:24 PM

பேரிடர் காலத்தில் சேவை செய்தோருக்கு சிறப்பு விருது

Dec 27, 2018 8:24 PM

புயல்,வெள்ள மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள விடுத்துள்ள செய்தி குறிப்பில், ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ என்னும் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் சேவை செய்த தனிநபர் அல்லது தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரிய ஆதாரங்களுடன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர் தனிநபர்களாக இருந்தால் நற்சான்றிதழுடன் 5 லட்சம் ரூபாயும், தொண்டு அமைப்புகளாக இருந்தால் நற்சான்றிதழுடன், 51 லட்சம் ரூபாயும் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் அடுத்த மாதம் 7-ஆம் தேதிக்குள் www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.