​​ சீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்

சீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்

Jan 30, 2018 10:51 AM

சீனாவில் குளிர்காலம் உச்சத்தில் உள்ளதால் ஜியுஹூவா ((Juehua )) தீவின் கடல் பகுதி முற்றிலும் உறைந்துபோயுள்ளது.

ஸிங்செங் ((Xingcheng)) மாகாணத்தின் அருகில் உள்ள லியாவோடாங் வளைகுடா பகுதியில் கடல் பகுதியில் கிட்டத்தட்ட 130 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கடல் பகுதி உறைந்துள்ளது. உறைபனி காரணமாக ஜியுஹுவா தீவில் உள்ள 3 ஆயிரம் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த உறைபனி கடல் மட்டத்தில் ஒரு அடி உயரத்திற்கு உறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும், சிறிய ரக கப்பல்களும் உறைபனியில் சிக்கியுள்ளன.