​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல், 3 பேர் கைது

Published : Jan 29, 2018 6:45 PM

திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல், 3 பேர் கைது

Jan 29, 2018 6:45 PM

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஓடையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அயன்தத்தனூர் கிராமத்தில் செல்லும் ஓடையில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் அங்கு சென்ற தளவாய் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 3 பேரை பிடித்தனர்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.