​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

Published : Dec 25, 2018 3:49 PM

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

Dec 25, 2018 3:49 PM

சென்னையை அடுத்த மாதவரத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதவரம் அலெக்ஸ் நகரைச் சேர்ந்த பாண்டியனுக்கும், அவரது காதல் மனைவி முஹின் என்பவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்றும் இதுபோல் பிரச்சனை ஏற்படவே, பாண்டியன் தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் உறங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. காலையில் எழுந்து பார்த்த போது மின் விசிறியில், முஹின் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து சென்ற மாதவரம் போலீசார், அவரது உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.