​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பங்குச்சந்தை சரிவால் 6 பெரிய நிறுவனங்களுக்கு ரூ.89,531 கோடி இழப்பு

Published : Dec 23, 2018 4:20 PM



பங்குச்சந்தை சரிவால் 6 பெரிய நிறுவனங்களுக்கு ரூ.89,531 கோடி இழப்பு

Dec 23, 2018 4:20 PM

பங்குச்சந்தையில் கடந்த வாரம் கடும் சரிவு ஏற்பட்டதால் நாட்டின் முதல் 10 பெரிய நிறுவனங்களில் 6 நிறுவனங்களுக்கு 89 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகள் வரை சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 2 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை சரிவடைந்ததால் சந்தை மூலதனத்தில் 34 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர், இன்போசிஸ், கோடக் மகிந்திரா வங்கி, மாருதி சுசுகி போன்ற பெரு நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால் சந்தை 89 ஆயிரத்து 531 கோடி ரூபாய் சந்தை மூலதனம் குறைந்தது. ரூபாய் மதிப்பு அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக வெளிநாட்டு மூதலீட்டாளர்கள் கடந்த 3 வாரங்களில் 4 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.