​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் குவாரி, கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு உத்தரவு

Published : Dec 22, 2018 8:27 AM



மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் குவாரி, கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு உத்தரவு

Dec 22, 2018 8:27 AM

மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் குவாரி, கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்திருக்கும் எழுத்துப்பூர்வமான பதிலில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. கேரளா, தமிழ்நாடு முதல், மகாராஷ்டிரா வரையிலான ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில், 56 ஆயிரத்து 825 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல பகுதியில், சுரங்க திட்டம், கல் குவாரி, மணல் குவாரி, அனல் மின் திட்டம் ஆகிய 5 வகையான புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.