​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Published : Dec 22, 2018 8:26 AM



பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Dec 22, 2018 8:26 AM

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரிடம் 40 லட்சம் ரூபாய் கடன்வாங்கி திருப்பித் தரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே ஒரு வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சூர் செல்வம் ஜாமீனில் வெளி வந்த நிலையில் நேற்று காலை சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் மீண்டும் கைது செய்து சென்னை சைதை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதையடுத்து வரிச்சூர் செல்வத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.