​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பணமோசடி

Published : Dec 22, 2018 8:16 AM

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பணமோசடி

Dec 22, 2018 8:16 AM

தேனி மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். போடி அருகே தருமத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்புவதாக அறிவிப்பு செய்ததன் பேரில், ஏராளமானோர் ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கொடுத்தனர். பின்னர் அவர்களுக்கு வேலை கிடைத்து விட்டதாகக் கூறி விசா மற்றும் விமான டிக்கெட்டுக்களை வழங்கினார்.

ஆனால் சென்னை சென்ற இளைஞர்களுக்கு அவை போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து போடி தாலுகா காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.