​​ நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி


நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி

Jan 29, 2018 6:25 PM

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்க விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் குறைதீர் கூட்டத்துக்கு வந்த மக்கள் தேசியக் கொடி மேலே பச்சை, கீழே காவி எனத் தலைகீழாகப் பறப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்துப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த கோட்டாட்சியர் மைதிலி தலைகீழாகப் பறந்த தேசியக்கொடியைக் கீழே இறக்கிப் பின்னர் சரியாக ஏற்றினார்.