​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தா ஆஜராகவில்லை, அடுத்த முறை ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் - நீதிமன்றம்

Published : Dec 21, 2018 7:53 AM



பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தா ஆஜராகவில்லை, அடுத்த முறை ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் - நீதிமன்றம்

Dec 21, 2018 7:53 AM

பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராகாத நித்யானந்தாவை கண்டித்துள்ள கர்நாடக நீதிமன்றம், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

அம்மாநிலத்தின் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010ஆம் ஆண்டு இவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு ராமநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த போதும் நித்யானந்தா ஆஜராகவில்லை.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஜனவரி 3ஆம் தேதி அன்று நித்யானந்தா ஆஜராக உத்தரவிட்டார். ஆஜராகாவிட்டால், பிணையில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தார்.