​​ உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

Jan 29, 2018 5:11 PM

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய நிலை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி முறையில் அடிக்கல் நாட்டினார். 

அடிக்கல் நாட்டுவதற்கு முன்னதாகப் பேசிய மின் துறை அமைச்சர் தங்கமணி, தமிழகம் தொடர்ந்து மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், மின் மிகை மாநிலமாகவும் மாறிவருவதாகக் கூறினார். கூடிய விரைவில் மின்சார வாரியம் லாபம் ஈட்டும் நிலைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தின் மின் தேவை போக மீதம் உள்ள மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில் மின்வாரியத்தை சீர்திருத்தியவர் ஜெயலலிதா என்று கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 46 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.