​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க அனுமதி, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

Published : Dec 19, 2018 1:15 PM

ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க அனுமதி, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

Dec 19, 2018 1:15 PM

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரிப் பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு ஆணை வெளியிட்டதுடன் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தேசியப் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த பசுமைத் தீர்ப்பாயம் 3வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன் முறையிட்டார். அப்போது முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.