​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட்

Published : Dec 19, 2018 6:21 AM



இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட்

Dec 19, 2018 6:21 AM

ராணுவப் பயன்பாட்டிற்கான ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று 4.10 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 13வது முறையாக ஏவப்படுகிறது.

இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரத்து 250 கிலோ எடைகொண்ட ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் அனுப்பும் திட்டத்துக்கான 26 மணி நேர கவுன்-டவுன் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 4.10 மணியளவில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.