​​ ஜெயலலிதா சிகிச்சை கட்டணத்தில் ரூ.44 லட்சம் கட்டண பாக்கி - அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா சிகிச்சை கட்டணத்தில் ரூ.44 லட்சம் கட்டண பாக்கி - அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Published : Dec 18, 2018 12:57 PMஜெயலலிதா சிகிச்சை கட்டணத்தில் ரூ.44 லட்சம் கட்டண பாக்கி - அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Dec 18, 2018 12:57 PM

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான கட்டணத்தில், 44 லட்சம் ரூபாய் பாக்கி இன்னும் வரவேண்டியுள்ளதாக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் கட்டண பாக்கி குறித்த விவரங்களை அந்த மருத்துவமனை நிர்வாகம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஜெயலலிதா 75 நாட்கள் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில், உணவுக்கு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூயாய் செலவாகியுள்ளது.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு 92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாயும், சிங்கபூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு பிசியோதெரபி சிகிச்சைக்காக 1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கான அறை வாடகையாக 24 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய் ஆகியுள்ளது.

பொதுவான அறை வாடகை, 1 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 100 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோடபர் 13ஆம் தேதி காசோலையாக 41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் அப்பலோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு, 2017ஆம் ஆண்டு ஜூன் 15 ம் தேதி அதிமுக சார்பாக காசோலையாக 6 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த மருத்துவ செலவான, 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாயில், 6 கோடியே 41 லட்சத்து 13 லட்சத்து 304 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கட்டண பாக்கியாக, 44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாய் இன்னும் தர வேண்டியுள்ளது என்றும் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உணவுக்கான செலவு என கட்டண விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஜெயலலிதா உட்கொண்ட உணவுகளுக்கான செலவு மட்டும் அல்ல என்றும், அங்கு உடனிருந்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள், செய்தியாளர்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்ட உணவுக்கும் சேர்த்தே கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.