​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கணவர் புகழ்ந்ததைக் கேட்டு கண்ணீர் சிந்தியா தீபிகா படுகோன்

Published : Dec 17, 2018 2:37 PM

கணவர் புகழ்ந்ததைக் கேட்டு கண்ணீர் சிந்தியா தீபிகா படுகோன்

Dec 17, 2018 2:37 PM

கணவன் ரன்வீர் சிங் தம்மைப் புகழ்ந்து பேசியதும், நடிகை தீபிகா படுகோன் கண்ணீர் சிந்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ரன்வீர் சிங் மேடையில் உரையாற்றினார். அப்போது பத்மாவத் படத்தில் வேண்டுமானாலும் தமது ராணியை இழந்திருக்கலாம், ஆனால் நிஜ வாழ்வில் தமது ராணி தமக்கு கிடைத்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

குழந்தை போன்ற தீபிகாவை தாம் மிகவும் விரும்புவதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் தாம் சாதித்ததெல்லாம் அவரால்தான் எனவும் புகழ்ந்துரைத்தார். இதைக் கேட்ட தீபிகா கண்ணீர் சிந்தியதும், தம்மை மேலும் அழாமல் கட்டுப்படுத்திய காட்சிகளும் வெளியாகியுள்ளன.