​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி விமானநிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் பறிமுதல்

Published : Dec 17, 2018 10:18 AM

திருச்சி விமானநிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் பறிமுதல்

Dec 17, 2018 10:18 AM

திருச்சி விமான நிலையத்தில் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் கடத்தல் தங்கம் பிடிபட்டது.image

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு நேற்றிரவு செல்லவிருந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த முஹம்மது உசைன் என்பவர் தனது உடைமையில் இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ, சௌதி ரியால் மற்றும் ஸ்விஸ் ஃபிராங்கை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

அதேபோன்று இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டபோது தஞ்சையை சேர்ந்த சாந்தி என்பவர் 100 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகளை தனது கழுத்தில் மறைத்து அணிந்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.