​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை

Published : Dec 16, 2018 6:37 PM



குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை

Dec 16, 2018 6:37 PM

குட்கா ஊழல் வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. அமைச்சர்கள், காவல்துறை டிஜிபி, கலால் வரித்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மாத மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் எழுதிய வைத்திருந்த டைரி தான் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்டமாக குடோன் உரிமையாளர் மாதவராவ் மற்றும் அதிகாரிகள் என 6 பேரை சிபிஐ கைது செய்தது.

வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பட்டது. அதன்படி நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் சனிக்கிழமை பிற்பகலில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நீடித்தது. அவரது உதவியாளர் சரவணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது. அதே போல் குட்கா ஊழல் நடந்த கால கட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணாவும் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் சுமார் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள் கடந்த செப்டம்பரில் அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்றும் பி.வி.ரமணா விசாரணைக்கு ஆஜரானார். 11 மணிக்கு ஆஜரான அவரிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரும் விசாரணைக்கு ஆஜரானார்.