​​ அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் விநியோகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் விநியோகம்

அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் விநியோகம்

Jan 29, 2018 2:42 PM

அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உறுப்பினர்கள் புதுப்பித்தலுக்கான படிவங்களை வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்தார்.