​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிமாநிலத்துக்குக் கடத்தப்பட இருந்த 6டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published : Dec 16, 2018 11:40 AM

வெளிமாநிலத்துக்குக் கடத்தப்பட இருந்த 6டன் ரேசன் அரிசி பறிமுதல்

Dec 16, 2018 11:40 AM

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் வெளிமாநிலத்துக்குக் கடத்த முயன்ற 6டன் ரேசன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

வெளிமாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாகக் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வண்டலூரில் தேசிய நெடுஞ்சாலையில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த லாரியைச் சோதனை செய்ததில் அதில் மூட்டைகளில் 6டன் ரேசன் அரிசி இருந்ததும் அது வெளிமாநிலத்துக்குக் கடத்தப்பட இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர். அரிசியைக் கடத்த முயன்ற ஓட்டுநர் மணியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.