​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை விமான நிலையத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Published : Dec 13, 2018 7:07 AM

மதுரை விமான நிலையத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Dec 13, 2018 7:07 AM

மதுரை விமான நிலையத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து வந்த விமானத்தில் இருந்த மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில்  ஈடுபட்டனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த  குதுப்தீன் என்பவர் உள்ளாடையில் 130 கிராம்  எடையுள்ள தங்க செயினை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு 4 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து சுங்க இலாகாவினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.