​​ ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல்

ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல்

Jan 29, 2018 11:51 AM

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில், ஆழ்வார் ((Alwar)) மற்றும் அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும், மண்டல்கர் ((Mandalgarh)) என்ற சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த தொகுதிகளில் ஆளும் பாஜக-விற்கும் காங்கிரசுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் இடைத்தேர்தலில் முதல்முறையாக, வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேற்குவங்கத்தில் உலுபீரியா ((Uluberia)) மக்களவைத் தொகுதிக்கும் நோப்பாரா ((Noapara)) என்ற சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்று வரும் இடைத் தேர்தலில் வாக்காளர்கள் ஜனநாயகக் கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்த தொகுதிகளில் ஆளும் திரிணமூல், மார்க்சிஸ்ட், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்று வரும் 5 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 1ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.