​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்

Published : Dec 11, 2018 6:50 PM

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்

Dec 11, 2018 6:50 PM

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்ததாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பனிப் போர் நீடிப்பதாக கூறப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித்படேல் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து புதிய ஆளுநராக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கும் விஸ்வநாதன் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார். பொருளாதார விவகாரத்துறை செயலாளராக இருந்த சக்திகாந்த தாஸ், கடந்த ஆண்டு மே மாதம் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். தமிழகத்தில் தொழில்துறை செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ள சக்திகாந்த தாஸ், தற்போது நிதி ஆணையத்தின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.