​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஓட்டம்

Published : Dec 10, 2018 8:09 PM

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஓட்டம்

Dec 10, 2018 8:09 PM

ஜெர்மனியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஓட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த து. அந்நாட்டின் மிக்கென்டிராப் நகரில் ஆண்டுதோறும் கிறிஸ்துமசை ஒட்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 1200 பேர் பங்கேற்றனர்.

இரண்டரை கிலோ மீட்டர் முதல் பத்து கிலோ மீட்டர் தூரம் வரை பல்வேறு பிரிவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உற்சாகத்துடன் ஓடினர். வீதிகளில் திரண்டு இருந்த பார்வையாளர்களும் உற்சாக குரல் எழுப்ப நிகழ்ச்சி களை கட்டியது. வாட்டும் குளிருக்கு இடையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.