​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

Published : Dec 10, 2018 1:39 PM

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

Dec 10, 2018 1:39 PM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிசம்பரில் நடக்கிறது. நாளை தொடங்கி ஜனவரி 8 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

20 அமர்வுகள் அடங்கிய இந்தக் கூட்டத் தொடரின் போது, மக்களவையில் 15 முக்கிய மசோதாக்களும், மாநிலங்களவையில் 8 முக்கிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றபட உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய முழு நீள கூட்டத் தொடர் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிபிஐ அதிகார மோதல், அயோத்தி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோரும், அவை உறுப்பினர்களை தனியே சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர்.