​​ அயோத்தியில் ராமர்கோவில் கட்ட உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும் -விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தியில் ராமர்கோவில் கட்ட உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும் -விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்

Published : Dec 10, 2018 7:59 AM

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும் -விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்

Dec 10, 2018 7:59 AM

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் விஸ்வஇந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., சாதுக்கள் என ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பா.ஜ.க. வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார். மக்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து அயோத்தி விவகாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தேவைப்பட்டால் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.