​​ மும்பை தாக்குதலை நடத்தியது பாக். தீவிரவாதிகள்தான் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பகிரங்க ஒப்புதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பை தாக்குதலை நடத்தியது பாக். தீவிரவாதிகள்தான் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பகிரங்க ஒப்புதல்

Published : Dec 10, 2018 7:51 AMமும்பை தாக்குதலை நடத்தியது பாக். தீவிரவாதிகள்தான் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பகிரங்க ஒப்புதல்

Dec 10, 2018 7:51 AM

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள்தான் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என தமது அரசு விரும்புவதாக குறிப்பிட்டார். 

இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் பாகிஸ்தான் நலனும் அடங்கியிருப்பதாக இம்ரான்கான் தெரிவித்தார். பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணை குறித்த விவரங்களை தாம் கேட்டிருப்பதாகவும் இம்ரான்கான் கூறினார்.