​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாதவரம் பேருந்து நிலையத்தில் கை நரம்பை பிளேடால் அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

Published : Dec 08, 2018 3:22 PM

மாதவரம் பேருந்து நிலையத்தில் கை நரம்பை பிளேடால் அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

Dec 08, 2018 3:22 PM

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் கை நரம்பை பிளேடால் அறுத்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த கீதாமாதுரி என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அண்மையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை பெற்றோர் ஊருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

நேற்று மாலை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் அவர்கள் காத்திருந்த போது கீதாமாதுரி கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறியுள்ளார். வெகுநேரமாகியும் அவர் திரும்பாததால் பெற்றோர் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கையில் ரத்தம் சொட்டச் சொட்ட பிளேடுடன் கீதாமாதுரி மயங்கிக் கிடந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.