​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலச்சரிவு அபாயம் உள்ளதால் குன்னூரில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்

Published : Dec 07, 2018 11:19 AM



நிலச்சரிவு அபாயம் உள்ளதால் குன்னூரில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்

Dec 07, 2018 11:19 AM

நீலகிரி மாவட்டம் குன்னூரில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து வருகின்றனர். நாளுக்கு நாள் விதிகளை மீறி கட்டப்படும்  கட்டிடங்களால் குன்னூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

image

இதனை முனனிட்டு 1993-ல் அமல்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான்படி அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் கட்டிடங்கள் கட்ட னுமதி இல்லை. இதே 7 மீட்டரை விட அதிக உயரத்திலும் குன்னூர் பகுதியில் கட்டிடங்கள் கட்டக்கூது. மேலும் 30 டிகிரி அளவுக்கு சாய்வாக உள்ள மலைப் பகுதியிலும் கட்டிடம் கட்ட தடை விதிக்கப்பட்டது. 

இதை அடுத்து, குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் யோகேஷ் என்பவர் வீடுகட்டுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு ரிசார்ட் கட்டி வருவதாக அறிந்த அதிகாரிகள் அந்த கட்டிடத்துக்கும், அனுமதியின்றி கட்டப்பட்ட மோகன் தாஸ் என்பவரின் கடைகளுக்கும் சீல் வைத்தனர். விதி மீறிக் கட்டப்பட்ட 3 அடுக்கு கட்டிடங்களுக்கும் தொடர்ந்து சீல்  வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.