​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

Published : Dec 07, 2018 7:24 AM

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்

Dec 07, 2018 7:24 AM

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று  இரவு சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின்போது மாடவீதியை சுற்றி காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

மேலும் கோயில் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய படி வீதி உலாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆந்திரம், தெலங்கானா ,தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.