​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வரிசையாக விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்

Published : Dec 06, 2018 7:51 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வரிசையாக விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்

Dec 06, 2018 7:51 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் செட்டீஸ்வர் புஜாரா சதம் அடித்தார்.

அடிலெய்டில் நடைபெற்று வரும் போட்டியின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது. ராகுல், முரளி விஜய், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

புஜாரா மட்டும் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். இது அவரது பதினாறவது சதமாகும்.

ரோகித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோர் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இந்திய அணி 250 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.