​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சார திருட்டில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஆய்வாளர்

Published : Dec 06, 2018 6:25 PM

மின்சார திருட்டில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஆய்வாளர்

Dec 06, 2018 6:25 PM

சென்னையில் காவல் ஆய்வாளர்கள் குடியிருப்பில் முறைக்கேடாக வீட்டிற்கு மின்சாரம் பயன்படுத்திய ஆய்வாளருக்கு மின்சார வாரியம் அபராதம் விதித்துள்ளது

சென்னையில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரியும் ஜெயக்குமார், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஆய்வாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் முதல் தளத்தில் உள்ள தனது வீட்டிற்கு, மின்கம்பத்தில் இருந்து நேரடியாக இணைப்பை ஏற்படுத்தி மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வருவதாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அமலாக்கப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அதிகாரிகள் நேரில் சோதனை நடத்தியதில் மின்சாரம் திருடியது உறுதியானது. இதையடுத்து, மின்வாரிய அமலாக்கப் பிரிவின் சட்டத்தின்படி மின் திருட்டை காவல் நிலையத்தில் புகாராக கொடுக்காமல் இருக்க 6 ஆயிரம் ரூபாயும், முறைக்கேடாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு 18 ஆயிரமும், ஏற்கனவே செலுத்த வேண்டிய தொகை 26 ஆயிரம் என ஆய்வாளர் ஜெயக்குமாருக்கு 54 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

காவல் ஆய்வாளர் குடியிருப்புகளுக்கு ஒரே இணைப்பில் மூலம் தான் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் ஏன் இவர் தனியாக மின்சாரம் திருடினார் என விசாரித்த போது, கீழ் தளத்தில் வசிக்கும் மற்றொரு ஆய்வாளர் குடும்பத்தினர் இவரது வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அடிக்கடி துண்டித்து விடுவதாக ஆய்வாளர் ஜெயக்குமார் குற்றம்சாட்டுகிறார்.

கீழ் தளத்தில் வசிக்கும் ஆய்வாளர் குணவர்மன் குடும்பத்தினருக்கும், ஜெயக்குமார் குடும்பத்துக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்ததாகவும், ஜெயக்குமார் வீட்டிற்கு செல்லும் இணைப்பு இரவு நேரங்களில் துண்டித்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது