​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியல் கட்சிகள் கோவில்களுக்குப் பதில் பள்ளிகளைக் கட்ட வேண்டும் - மத்திய அமைச்சர் உபேந்திர குஸ்வாகா

Published : Dec 06, 2018 6:06 PM

அரசியல் கட்சிகள் கோவில்களுக்குப் பதில் பள்ளிகளைக் கட்ட வேண்டும் - மத்திய அமைச்சர் உபேந்திர குஸ்வாகா

Dec 06, 2018 6:06 PM

கோவில்களைக் கட்டுவதற்குப் பதிலாகப் பள்ளிக்கூடங்களைக் கட்ட வேண்டும் என மத்திய அமைச்சர் உபேந்திர குஸ்வாகா தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய லோக் சமதாக் கட்சித் தலைவரான உபேந்திர குஸ்வாகா, மத்திய அரசில் மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக உள்ளார். இவர் அண்மைக்காலமாக மத்திய அரசையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் பீகார் மாநிலம் மோதிகாரியில் பேசிய அவர், அரசியல் கட்சிகள் கோவில்கள் கட்ட வேண்டாம் என்றும், அதற்குப் பதில் மக்களுக்குக் கல்வியளிப்பதற்காகப் பள்ளிக்கூடங்களைக் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.